முக்கிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,024 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.701 கோடியாக இருந்தது. ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் மிகச்சிறிய அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.9,726 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.9,801 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானம் ரூ.68,062 கோடியில் இருந்து ரூ.73,660 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒரு பங்குக்கு ரூ.2.50 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. தவிர 10 பங்குகளுக்கு ஒரு பங்கினை போனஸாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.