வணிகம்

ஐடிபிஐ வங்கி நஷ்டம் ரூ.3,200 கோடி

செய்திப்பிரிவு

ஐடிபிஐ வங்கி மார்ச் காலாண்டில் ரூ.3,200 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நஷ்டம் ரூ.1,736 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நஷ்டம் ரூ.5,158 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.3,665 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.4,450 கோடியில் இருந்து ரூ. 6,209 கோடியாக அதிகரித்திருக்கிறது.

மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 21.25 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10.98 சதவீதமாக இருந்தது. அதேபோல நிகர வாராக்கடன் 6.78 சதவீதத்தில் இருந்து 13.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வட்டி வரம்பு 1.75 சதவீதமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT