குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது தேசிய பேரிடர் தொகுப்பு வரி (என்சிசிடி) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்டது. தற்போது இந்த பட்ஜெட்டில் அது மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 65 மில்லி மீட்டர் நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி (1000 சிகரெட்டுகளுக்கு) ரூ.200 லிருந்து ரூ.230 ஆக உயர்த்தப்படுகிறது.
65 மில்லி மீட்டர் நீளத்திற்கு அதிகமான, ஆனால் 70 மில்லி மீட்டர் நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி ரூ.250 ரூபாயிலிருந்து ரூ.290 ஆக உயர்த்தப்படுகிறது.
65 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகளுக்கான வரி ரூ.440 லிருந்து ரூ.510 ஆக உயர்த்தப்படுகிறது.
65 மில்லி மீட்டருக்கு அதிகமான, அதே சமயம் 70 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் மீதான வரி ரூ.440 ரூபாயிலிருந்து ரூ.510 ஆக அதிகரிக்கப்படுகிறது.
70 மில்லி மீட்டருக்கு அதிகமான, அதே சமயம் 75 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகளுக்கு வரி ரூ.545 ரூபாயிலிருந்து ரூ.630 ஆக உயர்த்தப்படுகிறது.
பிற சிகரெட்டுகளுக்கு ரூ.735 லிருந்து ரூ.850 ஆகவும், புகையிலை மாற்று சிகரெட்டுகளுக்கான வரி ரூ.600 லிருந்து ரூ.690 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.