பிரதிநிதித்துவப்படம் 
வணிகம்

மத்திய பட்ஜெட் 2023-24 | குறிப்பிட்ட சிகரெட்டுகளுக்கு 16% வரி அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய பேரிடர் தொகுப்பு வரியை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான இந்த வரி 16 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால், சிகரெட் விலை வெகுவாக அதிகரிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய நிதியமைச்சர் தேசிய பேரிடர் தொகுப்பு வரியை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான இந்த வரி 16% வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரி நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. புதிய வரி விபரம்:

  • 65 மி.மீ., நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி 1,000 குச்சிகளுக்கு ரூ.200-லிருந்து ரூ. 230 ஆக உயர்த்தப்படுகிறது.
  • 65 மில்லி மீட்டர் நீளத்திற்கு அதிகமான, அதேநேத்தில் 70 மி.மீ., நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி 1000 குச்சிகளுக்கு ரூ.250 இருந்து ரூ. 290 ஆக உயர்த்தப்படுகிறது.
  • 65 மி.மீ., குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் 1000 குச்சிகளுக்கு ரூ. 440 இருந்து ரூ.510 ஆக வரி உயர்த்தப்படுகிறது.
  • 65 மி.மீ., அதிகமான, அதே சமயம் 70 மி.மீ., குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் மீதான வரி ரூ. 440 இருந்து ரூ.510 ஆக அதிகரிக்கப்படுகிறது.
  • 70 மி.மீ., அதிகமான, அதே சமயம் 75மி.மீ., குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் 1000 குச்சிகளுக்கு வரி ரூ. 545 இருந்து ரூ. 630 ஆக உயர்த்தப்படுகிறது.
  • பிற சிகரெட்டுகளுக்கான வரி, ரூ.735 இருந்து ரூ.850 ஆகவும், புகையிலை மாற்று சிகரெட்டுகளுக்கு ரூ.600 இருந்து ரூ.690 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தேசிய பேரிடர் தொகுப்பு வரி (என்சிசிடி) குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT