நிர்மலா சீதாராமன் 
வணிகம்

மத்திய பட்ஜெட் 2023-24 | குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.

நிதித்துறை அதிகாரிகளுடன் அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கிறார். பின்னர் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமரின் ஒப்புதலைப் பெறுகிறார்.

முன்னதாக காலை நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பட்ஜெட் உரை அடங்கிய டேப்ளட்டுன் நிதியமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்தார்.

என்ன எதிர்பார்க்கலாம்? இந்த பட்ஜெட் மத்திய அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் சாமான்யர்கள் தொடங்கி கார்ப்பரேட்டுகள் வரை பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.அந்த வகையில் 80 சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் சலுகையினை, 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இந்த வரி விலக்கானது கடந்த 2014ல் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே இந்த முறை இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு சலுகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 2024ல் தேர்தல் நடைபெறவுள்ளதால் 80 சி சலுகை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT