பொதுத்துறை வங்கியான கார்ப் பரேஷன் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.160 கோடி யாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.510 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
இந்த காலாண்டில் மொத்த வருமானம் ரூ.5,730 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5,218 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 9.98 சதவீதத்தில் இருந்து 11.70 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 6.53 சதவீதத்தில் இருந்து 8.33 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
இருந்தாலும் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பாதியாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,960 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, தற்போது ரூ.948 கோடியாக குறைந்திருக்கிறது.
கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.561 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் 506 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
அதேசமயம் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.21,146 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.22,561 கோடியாக உயர்ந்திருக்கிறது.