மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இன்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 49 புள்ளிகள் (0.8 சதவீதம்) உயர்வடைந்து 59,549 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் (0.8 சதவீதம் ) உயர்வடைந்து 17,662 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும், விரைவில் வீச்சியை நோக்கி பயணித்தது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 250.78 புள்ளிகள் சரிவடைந்து 59,249.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.70 புள்ளிகள் சரிவடைந்து 17,578.25 ஆக இருந்தது
மத்திய பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2024 நிதிநிலை ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்த அறிக்கை வெளியாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருந்தனர். இதனால் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடனே பயணித்து. இந்த நாளில் அதிகபட்சமாக சென்செக்ஸ் 59,104 ஆகவும், நிஃப்டி 17,537 ஆகவும் குறைந்தது. பின்னர் மீண்டு லாப நஷ்டங்களின்றி நிறைவடைந்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 49.49 புள்ளிகள் உயர்வடைந்து 59,549.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.20 புள்ளிகள் உயர்வடைந்து 17, 662.15 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெல்ட்லே இந்தியா, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக்னாலாஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.