புது டெல்லி: இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் உள்நாட்டில் இதுவரையில் மொத்தம் 2.5 கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மைல்கல்லை கடந்த 9-ம் தேதி மாருதி நிறுவனம் எட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனம்தான் மாருதி சுசுகி. இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 1981-ல் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. 1983-ல் முதல் காரை அறிமுகம் செய்தது. அப்போது முதல் இப்போது வரையில் மக்களின் ரசனை மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கார்களை மாருதி தயாரித்து வருகிறது. அதன் ஊடாக வாகன பயன்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது மாருதி. இப்போது உள்நாட்டில் 2.5 கோடி வாகன விற்பனையை கடந்துள்ளது.
மாருதி கடந்து வந்த பாதை