பொதுத்துறை நிறுவனமான ஹட் கோவின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) வரும் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது. 11-ம் தேதி வரை இந்த நிறுவன பங்குகளுக்கு விண் ணப்பிக்கலாம். இந்த ஐபிஓ மூலம் ரூ.1,224 கோடி திரட்ட முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. 2,04,058,747 பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு பங்கின் விலை ரூ.56 முதல் ரூ. 60 என நிர்ணயம் செய்யப்பட் டிருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 10.19 சதவீத பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள இருக்கிறது. இந்த தொகை மத்திய அரசுக்கு செல்லும் என நிறுவனத்தின் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரவிகாந்த் தெரிவித்தார். இந்த நிறுவனம் வீட்டுக்கடன் மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவிலேயே கவனம் செலுத்தும். புதிய ரியல் எஸ்டேட் சட்டம், இந்த துறைக்கு நல்லதாகும் என்றும் ரவி காந்த் தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் இந்த நிறுவனம் ரூ.496 கோடி நிகர லாபம் ஈட்டி இருக் கிறது. இதே காலத்தில் ரூ.1,169 கோடி மொத்த வருமானம் ஈட்டி இருக்கிறது. பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.72,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.