பண மதிப்பு நீக்க நடவடிக்கை யானது பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதைப் போன்று நிதிச் சேவை நடவடிக்கையில் போடப்பட்ட அணுகுண்டு என்று ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி குறிப் பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் விலைகள் கட்டுக்குள் வரும் மேலும் இதில் வெளிப்படைத் தன்மை உருவாகும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
பொதுவாக மக்களிடம் அதிக அளவில் பணம் இருக்கும்போது தேவையற்ற பொருள்களையும் வாங்கிக் குவிக்கும் மனோபாவம் மேலோங்கும். இத்தகைய நடவடிக்கையானது பொறுப்பற்ற செலவழிக்கும் போக்கிற்கு வழிவகுக்கிறது. ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது மிகப் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தும்.
பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியதால் எப்படி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்கள் ஏற்பட்டனவோ அதைப்போல நிதித்துறையிலும் மாற்றங்கள் உருவாகும். அணு குண்டு சோதனை நடத்திய பிறகு இந்தியாவையும் அமெரிக்கா ஒரு பொருட்டாக மதிக்கத் தொடங் கியது, அதனை நடத்தியிருக்கா விட்டால் இந்தியாவை அமெரிக்கா நிச்சயம் திரும்பிப் பார்த்திருக்காது.
பண மதிப்பு நீக்க நடவடிக் கையை `வரலாற்றுப் பிழை’ என்றும் இதனால் நாட்டின் ஜிடிபி 2 சதவீத அளவுக்குக் குறையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கிறார். 2004-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்துள்ள வர லாற்றுப் பிழையை திருத்துவதற் காக பிரதமர் மோடி மேற்கொண் டுள்ள நடவடிக்கை இது. இதை இப்போது செய்யாவிடில் பிறகு எப்போதுமே நடைமுறைப்படுத்தி யிருக்க முடியாது. இதை செயல் படுத்துவதில் சில தவறுகள் இருக்கலாம்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தியிருப்பது கறுப்புப் பணத்துக்கு வழி வகுக்காதா என்னும் அச்சம் இருக்கிறது. 2 மாத கால அவகாசத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியாது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் நீக்க வேண்டும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒன்று மட்டுமே கறுப்புப் பணத்தை ஒழிக்க போதுமானதல்ல. இது கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே. நாடு இதன் மூலம் புதிய பொருளாதாரத்துக்கு தயாராகியுள்ளது.
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் 2004-ம் ஆண்டில் ரூ. 1.4 லட்சம் கோடியாக இருந்தது. அது இப்போது ரூ. 14.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிலை தொடர அனுமதித்தால் அது ரூ. 30 லட்சம் கோடியைத் தொட்டுவிடும்.
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கம் ஆண்டுக்கு 63 சதவீத அளவுக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் (2004-2010) அதிகரித்தது. இந்த பணம் அனைத்தும் பங்குச் சந்தையிலும், தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யப்பட்டன. அவற்றைத்தான் திரும்ப எடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய நடவடிக்கையை காங்கிரஸ் அரசு ஒரு போதும் எடுத்திருக்காது. மொத்த பணமும் வங்கி வரையறைக்குள் வந்துவிட்டால் பண மதிப்பு நடவடிக்கையானது வெற்றிகரமான நடவடிக்கையாகக் கருதப்படும் என்றார்.