நியூயார்க்: ஐபிஎம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு 177 நாடுகளில் செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பிளாக்செயின், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உருவாக்கத்தில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றிவருகிறது.
தற்போது இந்நிறுவனத்தின் பணப்புழக்கம் எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளது.மேலும், நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்நிறுவனம் 3,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் 70 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.