புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் அதற்கும் கீழே மதிப்பு இருக்கும் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த வேண்டும் என அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி.ஹெச். வெங்கடாசலம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகள் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் புதிய ரூ.2,000 நோட்டுகளை வாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள். ரூ.2,000 நோட்டை வாங்கி அவர்களால் அன்றாட செலவுகள் செய்ய முடியவில்லை. அதனால் உடனடியாக குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகளை சந்தையில் புழக்கத்தில் விடவேண்டும்.
ரூ.100 நோட்டுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்கள் மாற்றி சீரமைக்கப்பட்டாலும் பணம் இல்லாததால் அவை வேலை செய்யவில்லை. வாடிக் கையாளர்களின் கோரிக்கையை வங்கிகளால் பூர்த்தி செய்யமுடிய வில்லை.
இதன் காரணமாக தேவையற்ற பதற்றம், வங்கியாளர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கும் இடை யேயான வார்த்தை பரி மாற்றம் கடுமையாக இருக் கிறது. இதனால் வங்கி பணியாளர் களுக்கு அழுத்தம் அதிகரித் திருக்கிறது. சமயங்களில் சில வாடிக்கையாளர்கள் வங்கி கிளை களை வெளியில் இருந்து பூட்டி விடுகின்றனர் என்று வெங்க டாசலம் குறிப்பிட்டிருக்கிறார்.