வணிகம்

நானோ காரால் ரத்தன் டாடாவுடன் கருத்து வேறுபாடு: பங்குதாரர்களுக்கு நுஸ்லி வாடியா கடிதம்

பிடிஐ

வரும் 22-ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட இருக்கிறது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இயக்குநர்களில் ஒருவரான நுஸ்லி வாடியா கடிதம் எழுதி இருக்கிறார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை நானோ காரால் கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. இதில் எனக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என கூறியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கார் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் 1 லட்ச ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது ரூ.2.25 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அந்த கார் விற்கவும் இல்லை, சந்தை யில் அந்த விலை லாபத்துக்கான விலையும் இல்லை. ஒவ்வொரு காரும் நஷ்டத்துக்கே விற்கப்படு கிறது.

இந்த கார் அறிமுகம் செய்த உடனே வர்த்தக ரீதியில் தோற்று விட்டது என்பது தெரிந்துவிட்டது. அதன் பிறகு இந்த காருக்கு தொடர்ந்து முதலீடு செய்வது, அதற்கான பணியில் ஈடுபடுவது என்பது தேவையில்லாதது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டு களாக அதிக நஷ்டம் ஏற்பட்டிருக் கிறது. கடந்த நிதி ஆண்டில் 20,000 கார்கள் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

நானோ கார் உற்பத்தியை தொடர்வதன் மூலம் நிறுவனத்தின் நஷ்டம் மேலும் அதிகரிக்கும். தவிர பயணிகள் கார் வாகன சந்தையில் எதிர்மறையான தோற்றம் டாடா குழுமத்தின் மீது ஏற்படும்.

என்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. என்னுடைய செயல்பாடுகள் அல்லது நடவடிக்கைகளை குறை கூறியோ குற்றச்சாட்டுகள் கிடையாது. இது குறித்து ஏற்கெனவே டாடா சன்ஸ் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறேன் என்று தன்னுடைய கடிதத்தில் நுஸ்லி வாடியா கூறியிருக்கிறார்.

சைரஸ் மிஸ்திரி மற்றும் நுஸ்லி வாடியாவை டாடா மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து நீக்குவதற்கு 22-ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட இருக்கிறது.

மிஸ்திரி நீக்கம்

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத் தின் சிறப்பு பொதுக்குழு நேற்று கூடியது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து சைரஸ் மிஸ்திரி ஒருமனதாக நீக்கப்பட்டார். இந்த நிறுவனத்தில் டாடா சன்ஸ் வசம் 36.17 சதவீத பங்கு கள் உள்ளன. டாடா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து மிஸ்திரி ஏற்கெனவே நீக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT