வணிகம்

ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது: ஆக்ஸிஸ் வங்கி சிஇஓ ஷிகா சர்மா கருத்து

செய்திப்பிரிவு

ஊழியர்கள் நிறுவனத்திற்கு இழிவை ஏற்படுத்தும் வகையில் முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பது மிக வருத்தம் அளிக்கிறது என்று ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஷிகா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் வங்கியை பாதுகாப்போடு நடத்துவதற்கும் முறைகேடு ஏதும் நடக்காமல் இருப்பதற்கும் கேபிஎம்ஜி நிறுவனம் தணிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் ஷிகா சர்மா தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் 20 போலி வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.60 கோடி அளவுக்கு பணம் டெபாசிட் செய்யப் பட்டிருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஷிகா சர்மா கூறியிருப்பதாவது: வங்கியின் அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக செய்திகள் வருவது எனக்கு மிக வருத்தம் அளிக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில ஊழியர்கள் செய்யும் தவறினால் 55,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு களங்கம் ஏற்படுவதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். 55,000 ஊழியர்களும் தங்களது வேலை நேரம் போகவும் வேலை செய்து வருகிறார்கள். ஆக்ஸிஸ் வங்கி முன் எச்சரிக்கையாக சந்தேகத்துக்குரிய வங்கிக் கணக்குகளை கண்டறிந்து ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கியின் செயல் பாடு அதிக தரத்தில் இருந்து வருகிறது. இதே தரத்தோடு அனைத்து வகையிலும் ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு உதவிகளை செய்யும் என்று மீண்டும் நான் உறுதியளிக்கிறேன். திடீரென்று வங்கி கணக்கு இருப்பு உயர்ந்த கணக்குகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். முன் னெச்சரிக்கையாக மோசடியான வங்கி கணக்குகளையும் கண்டறிந்து வருகிறோம்.

அடுத்ததாக இதுதொடர்பாக கேபிஎம்ஜி நிறுவனத்தை தணிக்கை மேற்கொள்ள அழைத்திருக் கிறோம். இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும். பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்த பிறகு சூழலைப் புரிந்துகொண்டு துணையாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளி கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ளுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். மைக்ரோ ஏடிஎம் மூலம் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பணம் வழங்கி இருக்கிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங் களுக்கு சம்பளம் வழங்கப்பட் டிருக்கிறது.

இந்த வங்கியின் அடிப்படை பல மாக இருக்கிறது. வங்கி வாடிக்கை யாளர்கள் நலன்களைப் பாதுகாப் பதுதான் எங்களது இலக்கு என ஷிகா சர்மா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT