பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 27-ம் தேதி உயர்நிலைக் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். நிதி ஆயோக் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாடு குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. நிதி ஆயோக் உறுப்பினர்களின் கருத்துகளை எதிர்பார்ப்பதாக தனது பேஸ்புக் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார். இது தவிர பொருளாதார அறிஞர் கள், நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் உயர் அதிகாரி களின் கருத்துகளையும் அவர் கேட்டுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குறுந் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதை எவ்விதம் சமாளிப்பது என்பதற்கான வழி வகைகள் குறித்தும் இக்கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது.
ரிசர்வ் வங்கி மற்றும் பிற தரச் சான்று நிறுவனங்கள் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது மற்றும் ஆர்பிஐ-யின் நிதிக் கொள்கை குறித்தும் இக்கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.