கோப்புப்படம் 
வணிகம்

ரூ.2000 கோடிக்கான மின் வாகன உதிரிபாக தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றது சுந்தரம் ஃபாஸனர்ஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மின்வாகன பிரிவுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சுந்தரம் ஃபாஸனர்ஸ் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.2,061.75 கோடி (250 மில்லியன் டாலர்) ஆகும்.

சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு மின்வாகன உதிரிபாக தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றது இதுவே முதல் முறை.

சுந்தரம் ஃபாஸனர்ஸ் தயாரித்து அளிக்கும் உதிரி பாகங்கள் எம்எச்இவி/பிஎச்இவி/பிஇவி உள்ளிட்ட பல்வேறு மின் வாகன மாடல்களிலும், நடுத்தர வகை டிரக், எஸ்யுவி, செடான்களிலும் பயன்படுத்திக் கொள்ளப்படும். இந்த உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட புதிய வாகனத்தை 2024-ல் வட அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 15 லட்சம் உதிரி பாகங்களை தயாரித்து வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை உச்சம் 2026-ல் ரூ.428.84 கோடியை (52 மில்லியன்) எட்டும் என சுந்தரம் ஃபாஸனர்ஸ் மதிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT