வோல்வோ நிறுவனம் இரண்டு மாடல் புதிய கார்களை நேற்று கொச்சியில் அறிமுகப்படுத்தியது. வோல்வோ வி 40 மற்றும் வி 40 கிராஸ் கன்ட்ரி என்ற இரு மாடல்களையும் வோல்வோ ஆட்டோ இந்தியா லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் டாம் வான் பான்ஸ்டோர்ப் அறிமுகப்படுத்தினார்.
இது தவிர கொச்சியில் 3எஸ் வசதி கொண்ட பிரத்யேக விற்பனையகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
மேம்பட்ட தொழி்ல்நுட்பங்க ளைக் கொண்டதாக இந்த இரண்டு மாடல் கார்களும் வெளி வந்துள்ளன. 150 பிஹெச்பி திறன் 320 நியூட்டன் மீட்டர் டார்க் விசை, சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட ஆடியோ மற்றும் புளூடூத், தோர்ஸ் ஹாமர் முகப்பு விளக்குகள், சொகுசான இருக்கைகள், மின் விசையில் சரி செய்து கொள் ளும் முன் இருக்கைகள், பாதசாரி களைக் காக்கும் ஏர் பேக், சாவி யில்லா செயல்பாடு ஆகியன இந்த சொகுசு கார்களின் சிறப்பம்சமாகும். பாதசாரிகளைக் காக்கும் ஏர் பேக் இடம்பெற்றுள்ள முதலாவது கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. வி40 டி 3 மாடல் காரின் விலை ரூ. 28.53 லட்சமாகும். வி40 சிசி டி 3 காரின் விலை ரூ. 29.40 லட்சமாகும்.