வணிகம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் மாற்றமில்லை: சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,106 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,895 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சிறிது ஏற்றத்துடன் தொடங்கியபோதும், விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் மேலும் 58.29 புள்ளிகள் உயர்வடைந்து 60,173.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23.85 புள்ளிகள் சரிந்து 17,890.30 ஆக இருந்தது.

உலக அளவில் சாதகமான சந்தை சூழல் நிலவிய நிலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் சில்லறை பணவீக்கம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்ததால், இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் நிலையில்லாமலேயே பயணித்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,105.5 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.5 புள்ளிகள் சரிவடைந்து 17,895.7 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், அட்ல்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, இன்போசிஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT