பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டி விற்பனை அதிகரிப்பு: ஈரோடு வியாபாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், ஜவுளிச் சந்தையில் வேட்டி விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மொத்த ஜவுளிச்சந்தை நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள், ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்வர்.

நேற்று, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகள் வந்திருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வேட்டி, சேலை, குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், தைப் பூசத்துக்கான ஐயப்பன், முருகன் மாலை அணியும் பக்தர்களுக்கான வேட்டிகள் விற்பனை அதிகரித்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடுமையான குளிர் மற்றும் பனிக்காலம் தொடர்வதால் போர்வைகள், விரிப்புகள், கம்பளி உள்ளிட்ட ஆடைகளின் விற்பனையும் அதிகரித்திருந்தது. வேட்டிகள் ரூ.140 முதல் ரூ.160 வரையும், துண்டுகள் ரூ.50 வரையும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT