மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிந்து 60,484 இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் சரிந்து 18,028 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் சரிவுடனேயே தொடங்கிய இன்றைய வர்த்தகம், காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் மேலும் 304.45 புள்ளிகள் சரிவடைந்து 60,442.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81.40 புள்ளிகள் சரிந்து 18,019.80 ஆக இருந்தது.
உலகளாவிய குழப்பமான சூழல், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளின் பாதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடனே தொடங்கின. வர்த்தகத்தின் தொடக்கத்தின் போது சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 0.4 சதவீதம் சரிவடைந்திருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை டாடா மோட்டார்ஸ், , டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.