வணிகம்

கல்லூரியில் படிக்க முடியாமல் போனது வருத்தம் - தொழிலதிபர் கவுதம் அதானி பேச்சு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத்தில் வித்யா மந்திர் டிரஸ்ட் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற தொழிலதிபர் கவுதம் அதானி பேசியதாவது: படிப்பை கைவிட்டு மும்பைக்கு வந்த பிறகு எனது உறவினரான பிரகாஷ்பாய் தேசாய் ஒரு முறை மகேந்திரா சகோதரர்களை அறிமுகப்படுத்தினார்.

அவர்களிடம் வைரங்களை வகைப்படுத்த விரைவாக கற்றுக் கொண்டு சுயமாக வர்த்தகத்தை தொடங்கினேன். ஜப்பானியருடன் வர்த்தகம் செய்து ரூ.10,000 கமிஷனை பெற்ற நாள் இன்னும் என் நினைவில் உள்ளது.

நான் கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை என்ற ஏக்கம் இன்றும் என்னுள் உள்ளது. அதை நினைத்து பல நாட்கள் நான் வருத்தமடைந்துள்ளேன்.

ஒருவேளை கல்லூரி படிப்பை முடித்திருந்தால் அதனால் அதிக பயனை பெற்றிருப்பேன். இவ்வாறு கவுதம் அதானி பேசினார்.

SCROLL FOR NEXT