வணிகம்

இவரைத் தெரியுமா?- தமாரா இங்ராம்

செய்திப்பிரிவு

உலகின் மிகப் பெரிய விளம்பர நிறுவனமான ஜே வால்ட்டர் தாம்சன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2004-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு மே மாதம் வரை டீம் பி அண்ட் ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை மெக்கேன் வேர்ல்டுகுரூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

விசிட் லண்டன் என்ற அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

கிரே குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

கிரேட் பிரிட்டன் மார்க்கெட்டிங் அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

SCROLL FOR NEXT