கோப்புப்படம் 
வணிகம்

4,675 மின்பேருந்துகளை தயாரிக்க டெண்டர் வெளியிட்டது சிஇஎஸ்எல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனமான சிஇஎஸ்எல் 4,675 மின்பேருந்துகளை தயாரிப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,000 கோடி ஆகும்.

தேசிய மின்பேருந்து திட்டத்தின் (என்இபிபி) கீழ் இது அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது டெண்டர் ஆகும். மின்வாகன பயன்பாட்டை விரைவுபடுத்தவும், எரிபொருள் இறக்குமதி, கார்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கவும், டெல்லி, கேரளா மற்றும் தெலங்கானாவில் உள்ள மாநில போக்குவரத்துக்கான பயன்பாட்டில் குத்தகை அடிப்படையில் இந்த 4,675 மின்பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு 15 லட்சம் கிலோ லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும். அத்துடன் காற்று மாசுபாடும் கணிசமான அளவில் குறையும்.

SCROLL FOR NEXT