வணிகம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கார் விற்பனை பாதிப்பு

பிடிஐ

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் கார் விற்பனை குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த நவம்பர் மாத விற்பனை மிகக் குறைவாக உள்ளது. கார்கள் மட்டுமல்லாது இரு சக்கர வாகன விற்பனையும் 6 சதவீதம் குறைந்துள்ளது

கடந்த நவம்பர் மாத நிலவரப்படி மொத்தம் 2,40,979 பயணிகள் வாகனம் விற்பனையாகியுள்ளன. இந்த தகவலை இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் தெரிவித்துள் ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 2,36,664 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 1.82 சதவீதம் மட்டுமே விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மொத்தம் 1,73,606 ஆக உள்ளது. இதே காலத்தில் கடந்த வருடத்தில் 1,73,111 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வர்த்தக வாகனங்களின் விற்பனை 11.58 சதவீதம் குறைந்து 45,773 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

அனைத்து பிரிவு வாகனங்களின் விற்பனை கடந்த வருடத்தை விட 5.48 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் அனைத்து பிரிவு வாகனங்களின் விற்பனை 15,63,665 ஆக உள்ளது. இதே காலத்தில் கடந்த வருடம் 16,54,407 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

``நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ள சரிவு மொத்த விற்பனை அளவில் இல்லை. ரீடெய்ல் விற்பனை கணக்குகளை எடுத்துப் பார்க்கும்போதுதான் விற்பனை குறைந்ததற்கான காரணம் மிகத் தெளிவாகத் தெரியும். மேலும் 85 சதவீத வாகனங்கள் பைனான்ஸ் மூலமாக வாங்கப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டால் மக்கள் வாகனங் கள் வாங்குவதை தள்ளிப்போட் டுள்ளனர். இது கிராமப்புறங்களில் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன பிரிவு விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது’’ என்று சியாம் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் விஷ்ணு மாத்தூர் தெரிவித்தார்.

கார் விற்பனை சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த நவம்பர் மாதம் 8.14 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 96,767 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த வருடம் இதே மாதத்தில் 89,479 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் டொமஸ்டிக் கார்கள் விற்பனை 12.83 சதவீதம் சரிந்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் விற்பனை கடந்த நவம்பர் மாதம் 5.85 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த மாத நிலவரப்படி மொத்தம் 12,43,251 இருசக்கர வாகனங்களே விற்பனையாகியுள்ளன. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் 13,20,552 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்தது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT