வணிகம்

2023-ன் முதல் வர்த்தக நாளில் சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதிய வருடத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 327 புள்ளிகள் (0.54 சதவீதம்) உயர்வடைந்து 61,168 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 92 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்வடைந்து 18,197 ஆக இருந்தது.

வருடத்தின் முதல் நாள் பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 138.52 புள்ளிகள் உயர்வுடன் 60,979.26 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.45 புள்ளிகள் சரிவடைந்து 18,101.85 ஆக இருந்தது.

புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக உலக அளவில் பெரும்பாலன பங்குச்சந்தைகளின் விடுமுறை காரணமாக உலகளாவிய தாக்கம் பெரிதாக இல்லாமல் இந்திய பங்குச்சந்தைகள் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தது. காலையில் ஏற்றத்தில் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது நிலையில்லாமலேயே பயணித்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 60,765 வரை இறங்கியது, அதேபோல் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக 61,223 வரை உயர்ந்தும் இருந்தது.

இறுதியில் இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 327.05 புள்ளிகள் உயர்வடைந்து 61,167.79 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 92.15 புள்ளிகள் உயர்வடைந்து 18,197.45 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. அதேநேரத்தில் ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, நெஸ்ட்லே இந்தியா உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT