அமெரிக்காவைச் சேர்ந்த நெட்வொர்க் செக்யூரிட்டி நிறுவனமான ஜூனிபர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
1992-ம் ஆண்டு இந்த நிறுவனத் தில் பொறியாளராக பணிக்குச் சேர்ந்தவர். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.
இதே நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்கு பொது மேலாளர் பொறுப்பிலும், நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
நெட்வொர்க் செக்யூரிட்டி, சிலிகான் டெக்னாலஜி, ஜூனோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
நெட்வொர்க் டெக்னாலஜி துறையில் 12 புதிய கண்டுபிடிப்புகளுக்கு இவர் காப்புரிமை வைத்துள்ளார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பெற்றவர்.