புதுடெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உணவங்களில் மக்கள் ஆர்டர் செய்த உணவு வகைகள் தொடர்பாக ட்விட்டரில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. புத்தாண்டுக்கு முந்தைய நாளில் இரவு 10.25 மணி வரை 3.5 லட்சம் பிரியாணி பார்சல்களை விநியோகித்ததாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 75.4 சதவீத ஆர்டர்கள் ஐதராபாத் பிரியாணிக்காகவும், 14.2 சதவீத ஆர்டர்கள் லக்னோ பிரியாணிக்காகவும், 10.4 சதவீத ஆர்டர்கள் கொல்கத்தா பிரியாணிக்காவும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாடு முழுவதுஈம் 61,000 பீட்சாக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.
ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மூலம் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.