தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் மேலாளர்கள் 2 பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற 3 கிலோ எடை தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. டெல்லியில் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் பணிபுரிந்த ஷோபித் சின்ஹா மற்றும் விநீத் குப்தாஆகிய இரு மேலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப் போடு அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு மேலாளர்களையும் பணி இடை நீக்கம் செய்துள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு மேலாளர்கள் மீதும் அந்நியச் செலாவணி மோசடி (பிஎம்எல்ஏ) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்டிஜிஎஸ் வழியாக சில நிறுவனங்களுக்கு வங்கியி லிருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் சில நிறுவனங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவன இயக்குநர்களுக்கு இந்தப் பணம் மாற்றப்பட்டுள்ளது. இதே போல மாற்றம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் பெயரில் ஒருவருமே இல்லை என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
வங்கி செயல்பாட்டில் மிக உயரிய தரத்தோடு தங்கள் வங்கி செயல்பட்டு வருவதாகவும், வங்கி விதிமுறைகளை மீறும் ஊழியர்களை ஒருபோதும் வங்கி சகித்துக் கொள்ளாது என்றும் ஆக்ஸஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட இரு மேலாளர்கள் விஷயத்தில் அவர்களிருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசா ரணை அமைப்புக்கு வங்கி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.