வணிகம்

இவரைத் தெரியுமா?- பிரான்சிஸ்கோ அரிஸ்டேகியுட்ட

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் முன்னணி வங்கியான சிட்டி வங்கியின் ஆசிய-பசிபிக் பிராந்திய தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதற்கு முன் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

சிட்டி டிரான்சாக்ஸன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் லத்தீன் அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ பிராந்திய தலைவராக இருந்தவர். சிட்டி குழும பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

1994-ம் ஆண்டு சிட்டி குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தவர். 1997-ம் ஆண்டு சிட்டி குழுமத்தின் கார்ப்பரேட் வங்கிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

லண்டனில் உள்ள புருணல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

2003-ம் ஆண்டிலிருந்து இளைய தலைமுறை தலைவர்களுக் கான கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

SCROLL FOR NEXT