வணிகம்

பண மதிப்பு நீக்கம்: 30% விற்பனை சரிவு- மைக்ரோமேக்ஸ் அறிவிப்பு

பிடிஐ

மொபைல் போன் விற்பனையில் நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவன மான மைக்ரோமேக்ஸ் பண மதிப்பு நீக்கத்தால் 30% அளவுக்கு விற் பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் விற்பனை இருந்தாலும் ஒட்டு மொத்த லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் கும் பாதிப்படைந்திருக்கிறது. தவிர பெரும்பாலான ஆன்லைன் முன்பதிவுகளும் கேஷ் ஆன் டெலி வரி முறையில் நடைபெற்றுவந்தன. தற்போது இந்த வகை முன்பதிவுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சில இடங்களில் 15% விற்பனை யும், சில இடங்களில் 60% அளவுக்கும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மைக்ரோமேக்ஸ் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சுபஜித் சென் தெரிவித்தார். சந்தை முழுவதும் உருக்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க விற்பனையாளர்களுக்கு அதிக கடன் வழங்கி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொபைல் போன்கள், கம்ப்யூட் டர்கள் என பெரும்பாலான எலெக்ட் ரானிக் பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாக பங்குச் சந்தை ஆலோசனை, சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஐடிசி தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT