வணிகம்

5 வெளிநாட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்

செய்திப்பிரிவு

அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தை (பெமா) மீறியதால் 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்திருக்கிறது.

டாய்ஷ் பேங்க், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா, பேங்க் ஆப் டோக்கியோ அண்ட் மிட்சுபிஷி மற்றும் தி ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து ஆகிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்திருக்கிறது.

ஜெர்மனியை சேர்ந்த டாய்ஷ் வங்கிக்கு 20,000 ரூபாய் அபராதமும் மற்ற நான்கு வங்கிகளுக்கு தலா 10.000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

SCROLL FOR NEXT