வணிகம்

பணமில்லா பரிவர்த்தனைக்கு புதிய சேனல்

செய்திப்பிரிவு

பணமில்லா பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது பணமில்லா மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பற்றி வகுப்பெடுக்கும் வகையில் `டிஜிஷாலா’ என்ற புதிய தொலைக்காட்சி சேனலை மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

ஆண்டு முழுவதும் 24 மணி நேரம் இயங்கக்கூடிய சேனலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 3 மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் மட்டுமே பணமில்லா பொருளாதாரத்தை பற்றி வகுப்பெடுக்கும்.

SCROLL FOR NEXT