எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆட்டோமொபைல் துறைக்கென ஸ்கை வீல்ஸ் எனும் சிறப்பு விமான சேவையைத் தொடங்கியுள்ளது. சரக்குகளைக் கையாளு வதற்கென இந்நிறுவனம் எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ எனும் சேவையை செயல்படுத்தி வருகிறது. தற்போது வாடிக்கை யாளர்களின் கார்களை கையாளுவதற்கென ஸ்கை வீல்ஸ் எனும் சேவையைத் தொடங்கியுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்களுக்கென உயர்ரக சொகுசு கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்த விமானங்களில் அவர்கள் விரும்பும் இடங் களுக்குக் கொண்டு சென்று டெலிவரி அளிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் இந்நிறுவனம் அளிக்கும் எமிரேட்ஸ் ஸ்கை வீல்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஸ்கைவீல்ஸ் அட்வான்ஸ்டு எனும் சேவைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் வீடுகளி லிருந்து கார்கள் பெறப்பட்டு அவர்கள் விரும்பும் இடத்துக்கு டெலிவரி செய்யப்படும். ஏற்று மதி, இறக்குமதி, சுங்கத்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்நிறுவனமே மேற்கொள்ளும். பிரீமியம் பிரிவைத் தேர்வு செய்யும் வாடிக் கையாளர்களின் கார்களுக்கு காப்பீடு வசதியும் அளிக்கப்படும்.
இந்த சேவை 6 கண்டங்களில் 150 சேருமிடங்களுக்குப் பொருந்தும். வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், அவற்றை டெலிவரி செய்யவும் உரிய இட வசதியை துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் செய்துள்ளது.