சென்னை: பணவீக்கத்தை மேற்கோள்காட்டி வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி சுஸூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்னணு உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் உள்நாட்டு மாடல்களில் வாகன உற்பத்தியில் சிறிய பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பைக் குறைக்க நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் காரணமாக செலவுஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும்ஜனவரி முதல் அனைத்து மாடல்களின் விலைகளையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாடல் காருக்கும் மாறுபடும்.
மாருதி சுஸூகி கடந்த நவம்பர்மாதத்தில் 1,59,044 யூனிட்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 39,184 ஆக இருந்தது. விற்பனைஅதிகரித்துள்ள நிலையில் மின்னணு உதிரிபாகங்கள் பற்றாக்குறையால் உள்நாட்டு மாடல்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மாருதி சுஸூகி இந்தியாவின் பங்குகள் 1.58 சதவீதம் குறைந்து ரூ.8,815 ஆக வர்த்தம் ஆனது. l