வணிகம்

‘ரேடியன்ட் கேஷ்’ புதிய பங்கு வெளியீடு இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று (டிச.23) தொடங்கவுள்ளது. டிசம்பர் 27-ம் தேதியுடன் நிறைவுபெறவுள்ள இப்புதிய பங்கு வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலை ரூ.94 முதல் ரூ.99-வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டின் மூலமாக மொத்தம் 39,185,606 பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.387.94 கோடியை திரட்டிக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ளப்படும் தொகை உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், செயல்பாட்டு மூலதனமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என ரேடியன்ட் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 150 பங்குகளுக்கும், அதன்பிறகு அதன் மடங்குகளிலும் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT