வணிகம்

இவரைத் தெரியுமா?- நவ்ரோஸ் தஸ்துர்

செய்திப்பிரிவு

ஏடிஎம் இயந்திரங்களைத் தயாரிக்கும் என்சிஆர் இந்தியா நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசியப் பிரிவின் நிர்வாக இயக்குநர். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தெற்காசியப் பிரிவின் நிதி மற்றும் நிதிச்சேவை தீர்வு துறையின் முதன்மை பொது மேலாளராக பொறுப்பு வகித்தவர்.

ஐகியூஎஸ்-டெலிரேட் நிறுவனத்தின் தெற்காசியப் பிரிவு தொழில் தலைவராக 6 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு எரிக்ஸன் இந்தியா நிறுவனத்தின் மொபைல் போன் பிரிவில் மண்டல மேலாளராக பணியாற்றினார்.

ரியல் வேல்யூ மார்கெட்டிங்ஸ், பெர்டெக் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் மேலாளராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

தொலைத் தொடர்பு, வங்கி, சந்தையிடுதல், உத்திகள் வகுப்பது, மனித வள மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் வல்லுநர்.

மும்பையில் உள்ள எம்எம்கே கல்லூரியில் பிகாம் பட்டமும், கொல்கொத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை உயர்கல்வி பட்டமும் பெற்றவர்.

SCROLL FOR NEXT