2014 -15 நிதியாண்டில் தகுதியிருந்தும் வரித்தாக்கல் செய்யாத 67.54 லட்சம் பேரை மத்திய நேரடி வரி ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்களை மத்திய நேரடி வரி ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அதில் சுமார் 67.54 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. வருமான வரி தாக்கல் செய்யாதவர்களை அடையாளம் காண்பதற்கான முயற்சியை மத்திய நேரடி வரி ஆணையம் மேற்கொண்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப துறையுடன் இணைந்து இதை செயல்படுத்துகிறது.
வரி தாக்கல் விவரங்கள், மத்திய புலனாய்வு அமைப்பு, டிடிஎஸ் புள்ளிவிவரங்களிள் அடிப்படையில் மத்திய நேரடி வரி ஆணையம் ஆய்வு செய்தபோது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வருமான வரித்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ள வரி தாக்கல் செய்யாதவர்கள் பிரத்யேகமாக ஆன்லைன் வரி தாக்கல் தளத்தில் வரி தாக்கல் செய்யலாம் என்று நேரடி வரி ஆணையம் கூறியுள்ளது.
இந்த தகவல்கள் குறிப்பிட்ட பான் எண் கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியவரும். இவர்களுக்கான ஆன்லைன் வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தளம்> https.//incometaxindiaefiling.gov.in. வருமான வரி செலுத்துபவர்கள் தங்களது உண்மையான வருமானத்தை காட்ட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய நேரடி வரி ஆணையமும் அதிக பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களை வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்து வருகிறது.