சாப்ட்பேங்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார்.
யாகூ ஜப்பான் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும், மொபைல் சேவை துறை நிறுவனமான பிரிஜ்ஸ்டார் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருந்தவர்.
ஸ்நாப்டீல், ஓலா கேப்ஸ், ஹவுசிங் டாட் காம், எஸ்பி எனர்ஜி போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பணியாற்றியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் சர்வதேச தொழில் உத்திகள் பிரிவில் தலைவர் மற்றும் மூத்த அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஸ்கை நிறுவனத்தில் சந்தையிடுதல் மற்றும் தொழில் உத்திகள் பிரிவிலும், கர்ஸன் அண்ட் கம்பெனி, ஜெமினி கன்சல்டிங் சேவை ஆகிய நிறுவனங்களில் உத்திகள் ஆலோசகராகவும் இருந்தவர்.
இ-காமர்ஸ், மின்னணு உத்திகள், நிறுவன வடிவமைப்பு, பகுப்பாய்வு, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட துறைகளில் வல்லுநர்.
இங்கிலாந்தின் பிரிட்ஜ்ஸ்டோன் ஹோவ் அண்ட் சஸ்ஸெக்ஸ் சிக்ஸ்த் பார்ம் கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் உயர்கல்வியும் முடித்தவர்.