வணிகம்

ரெனால்ட் நிசான் சென்னை ஆலையில் உற்பத்தியை குறைக்க திட்டம்

பிடிஐ

ரெனால்ட் நிசான் ஆட்டோ மோட்டிவ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தியை குறைக்க திட்ட மிட்டுள்ளது. உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொள் வதாக நிறுவனம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இதன்படி ரெனால்ட் - நிசான் சென்னை ஆலை யில் மூன்றாவது ஷிப்ட் உற்பத் தியை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் இரண்டாவது வாரத்தி லிருந்து மூன்று ஷிப்டுகளுக்கு பதிலாக இரண்டு ஷிப்ட் பணிகள் நடைபெறும் என்று சென்னை ஆலையில் தொழிலாளர்களுக்கு தகவல் அளித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

மூன்றாவது ஷிப்ட்டில் ஏற் கெனவே பணியாற்றிவந்த அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்கள் ஏற்கெனவே உள்ள தகுதி நிலையில் மற்ற ஷிப்ட்களில் பணியைத் தொடர்வார்கள். ரெனால்ட் க்விட் மற்றும் டட்ஸன் ரெடி-கோ மாடல் கார்களின் தேவை அதிகரிப்பதற்கு ஏற்ப மூன்றாவது ஷிப்ட் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ரக கார் களின் தேவை அதிகரித்து வரு கிறது. ஆனால் கார்களை பெறுவ தற்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது. இதனால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஆலை செயல்பாடு களை இரண்டு ஷிப்டுகளாக மாற்றியமைப்பதாக கூறியுள்ளது.

மூன்றாவது ஷிப்ட்டிலிருந்து நீக்கப்படும் பணியாளர்கள் ஆலையின் இதர பணிகளில் தொடர்வார்கள் என்று ரெனால்ட் நிசான் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் கோலின் மெக் டொனால்ட் தெரிவித்தார்.

பயணிகள் வாகன சந்தையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்துக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றும் கூறினார். பிரான்ஸ் - ஜப்பான் மோட்டார் வாகன நிறுவனங்களின் கூட்டில் 2008ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 4.80 லட்சம் கார்களாகும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT