வணிகம்

எல்ஐசி நிறுவனத்தின் வாட்ஸ் அப் சேவை அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்-அப் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆயுள் காப்பீட்டு சேவைகளை வழங்கும் எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார், பாலிசிதாரர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம்பதிலளிக்கும் சேவையை தொடங்கியுள்ளார்.

எல்ஐசியின் போர்டலில் பதிவு செய்துள்ள பாசிலிதாரர்கள் 8976862090 என்ற மொபைல் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டுபின்வரும் சேவைகளை பெறலாம். அதாவது, பாக்கி வைத்துள்ள பிரீமியத் தொகை, போனஸ், பாலிசியின் தற்போதைய நிலை, கடன் தகுதி விவரபட்டியல், கடன் திருப்பிச் செலுத்தும் பட்டியல், கடன் வட்டி பாக்கி,பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழ், யுலிப் பாலிசி சான்றிதழ் உள்ளிட்ட 11 சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த சேவையை வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என எல்ஐசி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT