கொல்கத்தாவை சேர்ந்த யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவை இணைக்கும் திட்டம் இல்லை என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த விஷயம் குறித்து இயக்குநர் குழு கூட்டத்தில் ஏதும் விவாதிக்கவில்லை. மேலும் மத்திய அரசிடமிருந்து இது குறித்து எந்தவிதமாக தகவலும் இல்லை என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்திருக்கிறது.
யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவும் இந்த தகவலை மறுத்திருக்கிறது. எந்த வங்கியுடனும் இணைப்பது குறித்த விவாதங்கள் ஏதும் நடக்கவில்லை என்று யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்திருக்கிறது. இரண்டு வங்கிகளும் பொதுத்துறை வங்கிகளாகும்.