வணிகம்

‘உத்யம் சகி’ இணையதளத்தில் தமிழக பெண் தொழில்முனைவோர் 1,067 பேர் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் ‘உத்யம் சகி’ இணையதளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 1,067 பெண் தொழில் முனைவோர் பதிவு செய்துள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பெண் தொழில் முனைவோருக்கு மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் நிதித்திட்டங்கள், கொள்கைகள் குறித்த தகவல்களை ‘உத்யம் சகி’ இணையதளம் (https://udyam-sakhi.com) அளிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் வரை ‘உத்யம் சகி’ இணையதளத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோரின் மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ராணிப்பேட்டையில் 334 பேர், சேலத்தில் 163, திருவண்ணாமலையில் 210, வேலூரில் 360 என மொத்தம் 1,067 பெண் தொழில் முனைவோர் அக்டோபர் 22 வரை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணைஅமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, எழுத்துப்பூர்வமாக நேற்று தெரிவித்ததாக, பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT