வணிகம்

எரிவாயு துறையில் 2000 கோடி டாலர் முதலீடு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

பிடிஐ

இயற்கை எரிவாயு துறையில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 2000 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளதாக இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இயற்கை எரிவாயு பயன்பாடு இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது, மற்றும் பசுமை எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

சிஐஐ ஏற்பாடு செய்திருந்த குளோபல் எனர்ஜி உரையாடல் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த முதலீடு இயற்கை எரி வாயு உற்பத்தியை அதிகரிப்பதற் காக பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் கூட்டு மூலம் கிழக்கு கடலோர மண்டலங்களில் எரிவாயு அகழ்ந்தெடுக்க முதலீடு செய்யப்படும் என்றார்.

உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு உற்பத்தியை 20 லட்சம் கோடி கன அடியாக உயர்த்த தேவையாக கொள்கை நடைமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள இந்த எரிவாயு திட்டங்கள் மற்றும் தற்போதைய ஏலத்தின் மூலம் சிறிய திட்டங்கள் வழியாக எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் உள்நாட்டு தேவைகளுக்கு கொண்டு வரப்படும்.

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, கிருஷ்ணா கோதாவரி படுகையில் 507 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இங்கிருந்து 1.6 கோடி கன அடி எரிவாயு உற்பத்தி செய்யும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

தவிர அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஆழ்கடல் எரிவாயு உற்பத்திக்காக 2000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும். பல்வேறு வகைகளிலும் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா என்ணெய் உற்பத் தியை அதிகரிக்க நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம். கச்சா எண்ணெய் தற்போதைய இறக்குமதி அளவிலிருந்து சுமார் 10% அளவுக்காவது 2022ம் ஆண் டுக்குள் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் என்றார்.

இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயு பயன்பாட்டில், வடக்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில் சுமார் 80 சதவீத நுகர்வு உள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க நட வடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT