பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரூபே கார்டு பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்துள்ளதாக நேஷ னல் பேமெண்ட் கார்ப்பரேஷன் (என்சிபிஐ) தெரிவித்துள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு தினசரி 21 லட்சம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
பாயின்ட் ஆப் சேல் மெஷின் கள், இ-காமர்ஸ் தளங்கள் உள்ளிட்டவை மூலம் முன்பு ஒரு நாளைக்கு 3 லட்சம் பரிவர்த்த னைகள் நடந்தன. ஆனால் இப்போது 21 லட்சம் பரிவர்த்த னைகள் நடப்பதாக என்சிபிஐ நிர்வாக இயக்குநர் ஏபி ஹூடா தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ரூபே கார்டுகள் மூலமாக 50 லட்சம் பரிவர்த்தனைகள் நடப் பதற்கு இலக்கு நிர்ணயம் செய் யப்பட்டிருக்கிறது. இதுவரை 31.7 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஜன் தன் வங்கி கணக்குக்காக 20.5 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 8-ம் தேதி மத் திய அரசு பண மதிப்பு நீக்கத்தை அறிவித்தது. புதிய ரூபாய் நோட்டு கள் புழக்கத்தில் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. வேறு வழி யில்லாமல் மக்கள் கார்டுகளை பயன்படுத்த தொடங்கி இருக் கிறார்கள். ஒருவேளை பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படாமல் இருந்தி ருந்தால், இவ்வளவு தூரம் கார்டு மூலம் பரிவர்த்தனை நடப்பதற்கு அதிக உழைப்பும் நேரமும் தேவைப்பட்டிருக்கும் என ஹூடா தெரிவித்தார்.
மேலும் ரூபே கார்டு பரிவர்த் தனை ஏழு மடங்காக உயர்ந் தாலும் இந்த எண்ணிக்கை எங்க ளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஒரு நாளைக்கு 5 லட்சம் பரிவர்த் தனைகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். இந்த இலக்கை அடைய இன்னும் ஒரு வருடம் ஆகும் என ஹூடா தெரிவித்தார்.