புதுடெல்லி: கார்கள் மற்றும் பைக்குகளுக்கான இன்சூரன்ஸை முறையே 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து ஐஆர்டிஏஐ மேலும் தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த, வசதியான தேர்வை அனுமதிக்கும் வகையிலேயே இந்த புதிய காப்பீட்டு திட்டத் துக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, மோட்டார் வாகன மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் சொந்த சேதக் காப்பீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நீண்ட கால காப்பீட்டுக்கான வரைவு மசோதாவில் உருவாக்கப்பட்டது. இதில், கார்களுக்கு மூன்று ஆண்டுகள், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த முன் மொழியப்பட்டுள்ளன.
ஆணையத்தின் இந்த பரிந்துரையால் அனைத்து பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் நீண்ட கால காப்பீட்டுத் திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முடியும். காப்பீட்டு பாலிசி கவரேஜுக்கான மொத்த பிரீமியமும் விற்பனையின்போதே வசூலிக்கப்படும். இவ்வாறு ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. பரிந்துரை 2019 செப்டம்பர் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்பனையாகும் அனைத்து கார்களுக்கு 3 ஆண்டுகள், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் கட்டாய மூன்றாம் தரப்பு காப்பீட்டு கவரேஜ் இருப்பதை உறுதி செய்வதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. இருப்பினும், இதனை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில்கொண்டு இந்த திட்டம் 2020 ஆகஸ்டில் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, ஐஆர்டிஏஐ அந்த திட்டத்தை செயல்படுத்த தனது வரைவு மசோதாவில் பரிந்துரை செய்துள்ளது. வாடிக்கையாளருக்கு பயன்மோட்டார் வாகனங்களை வாங்கும் உரிமையாளர்கள் சந்தையிலிருந்து அவர்களது வாகனத்துக்கு மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் சொந்த சேதக் காப்பீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய காப்பீட்டு தயாரிப்புகளை வாங்குவது நீண்ட கால அளவில் அவர்கள் மன அமைதியை பெற உதவும். மேலும், பொது காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கணிசமான தள்ளுபடிகளையும் வாகன உரிமையாளர்கள் பெறலாம்.