வணிகம்

கத்தார் எரிசக்தி திட்டங்களில் முதலீடு: இந்தியா ஆர்வம் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கத்தாரில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் முதலீடு செய்ய இந்தியா ஆர்வமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலிபா அல் தானி-யுடனான பேச்சுவார்த்தையின் போது மோடி இந்த தகவலை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ள கத்தார் பிரதமர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வாய்ப்புள்ள துறைகள் ஆராயப் பட்டது. பாதுகாப்பு, ராணுவம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறை களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்கு வது என்றும் அப்போது தெரிவிக் கப்பட்டது. மேலும் அந்நியச் செலா வணி மோசடி மற்றும் தீவிர வாத குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது உள்ளிட்ட வற்றில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற முடிவு செய்யப்பட்டது.

இரு பிரதமர்களும் பேச்சு நடத்திய பிறகு மொத்தம் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. விசா, சைபர் பிரிவு மற்றும் முதலீடு ஆகியன இதில் முக்கியமானவையாகும்.

இரு நாடுகளிடையிலான வர்த்தக பரிவர்த்தனை மிகவும் குறைவாக உள்ளதை இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவின் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மின் திட்டங்களில் கத்தார் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என பிரதமர் மோடி தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

எரிசக்தித் துறையில் வெறுமனே விற்பது வாங்குவது என்ற நிலையில் அல்லாமல் இரு நாடுகளும் கூட்டாக திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

அதேபோல கத்தாரில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் சார்ந்த திட்டப் பணிகளில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார்.

வளைகுடா பிராந்தியத்தில் கச்சா எண்ணெய் அளிப்பதில் மிக முக்கிய நாடாக கத்தார் திகழ்கிறது. 2015-16-ம் நிதி ஆண்டில் 66 சதவீத அளவுக்கு எல்என்ஜி கத்தாரிலிருந்துதான் இறக்குமதியானது.

2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்த உள்ளது. அதற்கான கள வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இத்திட்டப் பணிகளில் இந்தியாவும் இணைந்து செயலாற்றலாம் என்று கத்தார் பிரதமர் அழைப்பு விடுத்தார். கத்தார் துறைமுகத்தில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்நியச் செலாவணியை ஈர்ப்பதற்கு பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. சிவில் விமான போக்குவரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக ஸ்வரூப் தெரிவித்தார்.

இந்தியா ஆண்டுக்கு 80 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய் கிறது. நீண்ட கால அடிப்படையில் யூரியா சப்ளை செய்வது தொடர் பாக கத்தாருடன் உடன்பாடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள் ளதாக ஸ்வரூப் மேலும் கூறினார்.

உணவு பாதுகாப்பு விஷயத்தில் கத்தாரின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பிராந்திய விவகாரங்களில் இராக், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட அண்டை நாடுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலையும் கத்தார் குழுவினர் சந்தித்து பேசினர்.

SCROLL FOR NEXT