புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானும் சத்தீஸ்கரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. குஜராத் மற்றும் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில் சிஏஜி (இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2019-20-ம் நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனம் அல்லாத செலவினம் ரூ.9.78 லட்சம் கோடி ஆகும். இது அதன் மொத்த வருவாய் செலவான ரூ.26.15 லட்சம் கோடியில் 37 சதவீதம் ஆகும்.
இதில் சம்பளத்துக்கு ரூ.1.39 லட்சம் கோடி, ஓய்வூதியத்துக்கு ரூ.1.83 லட்சம் கோடி செலவு. இது சம்பள செலவைவிட ஓய்வூதிய செலவு அதிகம் என்று சிஏஜி கூறியுள்ளது.