வணிகம்

1,500 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரம்: தமிழ்நாடு அரசு வெளியீடு

செய்திப்பிரிவு

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் ரூ.17,947.21 கோடிக்கான கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இதற்கான ஏலம் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழக அரசு பத்து ஆண்டு களில் முதிர்வடையும் வகையில் ரூ.1,500 கோடிக்கு கடன் பத்தி ரங்களை வெளியிடுவதாக அறிவித்திருந்தாலும் தேவையைப் பொறுத்து கூடுதலாக ரூ.375 கோடிக்கு கடன் பத்திரங் களை வெளியிடவும் தீர்மானித் திருக்கிறது. மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கடன் பத்திரங்களை வெளியிடுவது வழக்கம். சராசரியாக ஆண்டுக்கு மூன்று முறை இதுபோன்ற கடன் பத்திரங்களை வெளியிட்டு அதன்மூலம் நிதிதிரட்டப்படும். இந்தப் பத்திரங்களில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள் ளிட்டவை ஏல முறையில் முதலீடு செய்யும்.

இதன்படி தற்போது, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் ரூ. 17,947.21 கோடிக்கான கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. பத்தாயிரம் ரூபாய் மற்றும் அதன் மடங்குகளில் வெளியிடப்படும் இந்த பத்தி ரங்கள் பத்து மற்றும் நான்கு ஆண்டுகளில் முதிர்வடையக் கூடியவை. இதில், அதிக பட்சமாக கர்நாடகா ரூ.3,500 கோடிக்கும், கோவா மாநிலம் ரூ.100 கோடிக்கும் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன.

ரூ.1000 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிடும் குஜராத்தும் கூடுதலாக ரூ. 300 கோடிக்கு பத்திரங்களை வெளி யிட தீர்மானித்திருக்கிறது. கடன் பத்திரங்களுக்கான வட்டி தொகை யானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 28 மற்றும் டிசம்பர் 28 தேதிகளில் இரு தவணைகளாக வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT