சுமன் பெரி 
வணிகம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்தால் கூடுதல் சுமை: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி நேற்று கூறியதாவது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப் போகிறோம் என்று கூறுவது கவலை அளிக்கிறது. அதனால் ஏற்படும் நிதிச் சுமை, எதிர்காலத்தில் வரி செலுத்துவோரின் தலையிலேயே விழும். தற்போது வரி செலுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படாது.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்ற நீண்டகால இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். அரசால் தற்போது அறிவிக்கப்படும் திட்டங்கள், எதிர்காலத்தில் நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். எதிர்கால மக்களின் நலனைக் காக்கும் நோக்கில் தற்போதைய அரசுகள் செயல்பட வேண்டும். இவ்வாறு சுமன் பெரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT