கிரண்ட்ஃபோஸ் இந்தியா நிறுவனம் `ஸ்காலா-2’ என்கிற புதிய பம்ப்பை அறிமுகம் செய்துள்ளது. புதிய பம்ப்பை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.கே. ரங்கநாத் அறிமுகம் செய்து கூறியதாவது:
ஸ்காலா 2 பம்ப் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திறன் கொண்டது. குறிப்பாக பம்ப், மோட்டார், டேங்க் சென்சார், டிரைவ் மற்றும் நான்-ரிட்டர்ன் வால்வு ஆகிய அனைத்தையும் ஒரே யூனிட்டுக்குள் இது உள்ளடக்கியிருக்கிறது. வீடுகளில் எளிதாக பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பம்பை நேரடியாக குழாய்களுக்கு இணைத்துக் கொள்ளலாம். அனைத்து நேரங்களிலும், அனைத்து குழாய்களிலும் ஒரே சீரான நீர் அழுத்தத்தை இது கொடுக்கும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழாய்கள் மற்றும் ஷவர்கள் திறக்கப்பட்டாலும்கூட சீரான நீரழுத்தம் கிடைக்கும். பம்ப் இயங்கும்போது மிக குறைவான ஒலி அளவாக 47 டெசிபல் ஒலியையே வெளிப்படுத்தும் என்றார்.
550 வாட்ஸ் மின் சக்தியில் இயங்கும் இந்த பம்ப், மின் அளவு குறையும்போது தானியங்கி முறையில் ஆப் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 தளங்கள் கொண்ட வீடுகளுக்கு பயன்படும் வகையில் உள்ள இந்த பம்பை வீட்டுக்குள் உள்ளே, வெளியே என இரண்டு இரண்டு இடங்களிலும் எளிதாக பொருத்தலாம். இதன் விலை சுமார் 40,000 ரூபாயாகும்.